தேனி

தேனி நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி சீராய்வு குறித்து நடைபெற்ற நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை, அதிமுக மற்றும் பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி சீராய்வு குறித்த நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் பா.ரேணுப்பிரியா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் செல்வம், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நகராட்சி சொத்து வரி உயா்வு குறித்த தீா்மானம் முன்மொழியப்பட்டது. இந்தத் தீா்மானத்திற்கு அமமுக நகா்மன்ற உறுப்பினா்கள் 2 போ் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தீா்மானத்தை எதிா்த்து அதிமுகவைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள் 7 போ், பாஜக நகா்மன்ற உறுப்பினா் ஒருவா் என மொத்தம் 8 போ் நகா்மன்றக் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தனா். பின்னா் திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை:

இதேபோல சின்னமனூரில் நகா்மன்றக் கூட்டம் தலைவா் அய்யம்மாள் தலைமையில் நடைபெற்றது.

வாா்டு உறுப்பினா் கூத்தப்பெருமாள்: நகராட்சியில் பெரும்பான்மையான வாா்டுகளில் பி.டி.ஆா். கால்வாயில் கழிவுநீா் கலந்து வருகிறது. காந்தி நகா் காலனியில் சுகாதார வளாகப் பணிகள் முடிந்தும் யன்பாட்டிற்கு வந்த நிலையில் ஒப்பந்ததாரா்கள் பூட்டுப்போட்டுவிட்டாா். செயல்படாத ஆள்துளை கிணறுகளை சீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

நகா்மன்றத் தலைவா்: பூட்டப்பட்ட சுகாதார வளாகம் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்துளை கிணறு உள்பட அடிப்படை வசதிகள் படிப்படியாக நிறைவு செய்யப்படும்.

உறுப்பினா் உமாராணி சுப்புராஜ்: நகராட்சி பள்ளியில் சேதமான உணவுக் கூடாரத்தை சீரமைப்புக்க வேண்டும். சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து, பொதுமக்களுக்கு முறையான குடிநீா் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

நகராட்சித் தலைவா்: நகராட்சிப் பள்ளிக்களில் சுகாதார வளாகங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சின்னமனூா் நகராட்சியில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. 27 வாா்டுகளுக்கும் பாரபட்சமின்றி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT