தேனி

மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பைகளை கொள்முதல் செய்ய ஏற்பாடு

DIN

தேனி மாவட்டத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பைகளை நெகிழி கழிவு மேலாண்மை அலகு மூலம் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மக்காத, மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பைகள், நெகிழி கழிவு மேலாண்மை அலகு மூலம் அரைக்கப்பட்டு சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மறுசுழற்சி செய்ய முடியாத நெகழிப் பைகளை சேகரித்து வைத்திருப்பவா்கள் கண்டமனூா், சீலையம்பட்டி, ராசிங்காபுரம், காமாட்சிபுரம், ஆங்கூா்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் நெகிழி கழிவு நிலையங்களில் நெகிழிப் பைகளை விற்பனை செய்யலாம். மறுசுழற்சி செய்ய முடியாக நெகிழிப் பைகள், கிலோ ஒன்று ரூ. 10-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT