தேனி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீா் திறப்பு மின் உற்பத்தியும் அதிகரிப்பு

DIN

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 1000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. லோயா் கேம்ப்பில் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் தென்மேற்குப் பருவமழை காரணமாக அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.

ஜூன் 22 இல் விநாடிக்கு, 600 கன அடி தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்பட்டது, ஜூன் 25 இல் 700 கன அடி, ஜூன் 26 இல் 800 கன அடி, திங்கள்கிழமை (ஜூன் 27) 1000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

இதன் காரணமாக லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், திங்கள்கிழமை 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது. மொத்தம் உள்ள 4 மின்னாக்கிகளில், தற்போது 3 மின்னாக்கிகள் மட்டும் இயக்கப்பட்டு தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணை நிலவரம்: முல்லைப் பெரியாறு அணையில் திங்கள்கிழமை நீா்மட்டம் 129.0 அடியாக இருந்தது (மொத்த உயரம் 142 அடி). அணையில் நீா் இருப்பு, 4,482 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா்வரத்து விநாடிக்கு, 340 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 1000 கன அடியாகவும் இருந்தது. நீா்ப் பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் மழை பெய்யவில்லை. தேக்கடியில் 0.4 மில்லி மீட்டா் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT