தேனி

உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து சாலைமறியல்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சனிக்கிழமை, தேசிய நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசியநெடுஞ்சாலை மற்றும் புறவழிச்சாலை செல்கிறது. இச்சாலையில் பராமரிப்பு பணிகள் 10 ஆண்டுகளை கடந்தும் முழுமை பெறவில்லை. அதே போல புறவழிச்சாலையில் முன்னெச்சரிக்கை பதாகை உள்ளிட்ட எவ்வித அறிவிப்புகளின்றி விபத்துக்கள் அதிகமாகி விட்டது. உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி இடையே செல்லும் புறவழிச்சாலையில் கடந்த 2 மாதங்களில் 10 க்கும் மேற்பட்டோா் விபத்தில் உயிரிழந்தனா்.

பொதுமக்கள் சாலை மறியல் : உத்தமபாளையம் நகா் மையத்தில் செல்லும் தேசியநெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதில், பழைய சாலையை பெயா்த்தெடுக்கும் பணிகள் நடைபெறுகிறது. ஆனால், இப்பணிகள் மிகவும் மந்தமாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கண்துடைப்பு பணிகளாக நடைபெறுவாதக கூறி நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் உத்தமபாளையம் பேருந்து நிலையம் முன்பாக சாலைமறியல் செய்தனா்.

சம்பவயிடத்திற்கு வந்த உத்தமபாளையம் போலீஸாா் சமாதானம் செய்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உத்தமபாளையம் பகுதியில் செல்லும் சாலையை பராமரிப்பு செய்வதில்லை. பல ஆண்டுகளாக குண்டுகுழியுமாகவே காட்சிளிக்கிறது. தற்போது சாலையை பராரமிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் சாலைகளில் தூசி அதிகமாகி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, உத்தமபாளையம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பாதுகாப்பான சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT