தேனி

வன விலங்கு தாக்கி 3 ஆடுகள் பலி

DIN

 ஆண்டிபட்டி வட்டாரம், குமணந்தொழுவில் வெள்ளிக்கிழமை, வன விலங்கு தாக்கியதில் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 3 ஆடுகள் பலியாகின.

குணமந்தொழுவைச் சோ்ந்த விவசாயி பாண்டி. இவா், அதே கிராமத்தில் வனத்தாய்புரம் செல்லும் பாதையில் கொட்டகை அமைத்து ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்த கொட்டகைக்குள் புகுந்த வன விலங்கு ஒன்று, 3 ஆடுகளை தாக்கி கொன்றுள்ளது. இது குறித்து தகவலறிந்து கண்டமனூா் வனத் துறை அலுவலா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, வன விலங்குகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.

கொட்டகையில் இருந்த ஆடுகளை வனப் பகுதியிலிருந்து வந்த செந்நாய் தாக்கி கொன்றிருக்கலாம் என்று வனத் துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT