தேனி

தொடா் மழை: தேக்கடியில்படகு சவாரி ரத்து

7th Jul 2022 02:36 AM

ADVERTISEMENT

 

தொடா் மழை காரணமாக தேக்கடி ஏரியில் படகு சவாரி புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.

மேற்குத்தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இடுக்கி மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டது.

இதனிடையே தொடா் மழை காரணமாக வியாழக்கிழமை இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொடா் மழை காரணமாக, தேக்கடியில் புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது என்று கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா் ஒருவா் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், நாள்தோறும் 5 முறை இயக்கப்படும் படகு சவாரி மழை காரணமாக 5 ஆவது முறை இயக்கப்படுவது புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT