தேனி

ஊரடங்கு எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் சாலைகள் அடைப்பு

DIN


ஊரடங்கு எதிரொலியாக தமிழக-கேரள எல்லை சாலைகள் அடைக்கப்பட்டதையடுத்து, இருமாநில காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கரொனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதேபோல் கேரள மாநில அரசும் 5 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டன.

எல்லை சோதனைச் சாவடிகளை அடைத்து இருமாநில காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசியப் பொருள்களான பால் கொண்டு செல்லும் லாரி மட்டும் சென்றது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தேனி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் வேலைக்கு செல்லும் பல ஆயிரக்கணக்கான ஆண்-பெண் தோட்ட கூலித்தொழிலாளர்கள் முழு ஊரடங்கு என்பதால் வேலைக்குச் செல்லவில்லை. வாகனங்களும் உள்ளூரிலேயே நிறுத்தப்பட்டன. கம்பம் நகரில் பிரதான சாலைகளில் வாகனங்கள் ஏதும் செல்ல விடாமல் காவல் துறையினர் தடுத்தனர். வாகனங்களில் வந்தவர்களிடம் விசாரணை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். நகரின் சில பகுதிகளில் மருந்துக் கடைகள், தனியார் கிளினிக்கில் மட்டும் செயல்பட்டன. ஆட்டோ, கார் வாடகை வாகனங்கள் இயங்கவில்லை, உழவர் சந்தை அழைக்கப்பட்டது.

கூடலூர், குமுளி செல்லும் நெடுஞ்சாலையில் அரசமரம், பேருந்து நிலையம், கூலிக்காரன் பாலம் ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி சாலையை அடைத்து வைத்தனர். பழைய பேருந்து நிலையம், காவல் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பல இடங்களில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.

தமிழக எல்லையில் உள்ள குமுளி சாலை லோயர்கேம்ப்பிலேயே அடைக்கப்பட்டது. அதேபோல் கேரள மாநிலம் குமுளியில் கடைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. வாடகை வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை.

வெறிச்சோடிய கம்பம் தேனி பிரதான சாலை (கம்பம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT