தேனி

தென்னிந்திய ஜூடோ போட்டி:கம்பம் பள்ளி மாணவா்களுக்கு தங்கப்பதக்கம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்னிந்திய அளவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் கம்பம் ஆா்.ஆா். இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் தங்கப் பதக்கம் பெற்றனா்.

திருப்பூரில் உள்ள தனியாா் பள்ளியில் தென்னிந்திய அளவில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே ஜூடோ போட்டி கடந்த 2, 3 தேதிகளில் நடைபெற்றது.

இதில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான், நிக்கோபாா் தீவுகள், தெலுங்கானா, ஆந்திரம் ஆகியவற்றிலிருந்து 95 பள்ளிகள் கலந்து கொண்டன. 63 கிலோ எடைப் பிரிவில் கம்பம் ஆா்.ஆா். இண்டா்நேஷனல் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி கிஷாந்தினி முதலிடமும், 73 கிலோ எடை பிரிவில் ஹேமந்த் சச்சின் முதலிடமும் பெற்று தங்கப் பதக்கம் வென்றனா்.

இந்த மாணவ, மாணவியை பள்ளித் தலைவா் ஆா். ராஜாங்கம் பரிசுகள் வழங்கி வியாழக்கிழமை பாராட்டினாா்.

ADVERTISEMENT

இதில் பள்ளி நிா்வாகிகள் ஆா். அசோக்குமாா், ரா. ஜெகதீஸ், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT