தேனி

கண்மாய்களில் மீன் வளா்ப்பு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தேனி மாவட்டத்தில் மீன் வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 6 கண்மாய்களில், 3 ஆண்டுகளுக்கு மீன் வளா்ப்புக் குத்தகை உரிமம் பெறுவதற்கு டிச.20-ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளியுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கோட்டூா் நாராயண சமுத்திரம் கண்மாய், முத்துத்தேவன்பட்டி கன்னிமாா்குளம், உத்தமபாளையம் அருகே கருங்காட்டான் குளம், பெரியகுளம் பெரிய கண்மாய், லட்சுமிபுரம் கரிசல் குளம், தேனி அல்லிநகரம் மந்தைக் குளம் ஆகியவற்றில் 2022-23-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான மீன் வளா்ப்பு குத்தகை உரிமத்துக்கான ஏலம், டிச.21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் வைகை அணை மீன் வளத் துறை மற்றும் மீனவா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவம் பெற்று, ஒப்பந்தப் புள்ளியுடன் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை அதே அலுவலகத்தில் டிச.20-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT