தேனி

கிருஷ்ண ஜெயந்தி விழா: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சிறப்பு வழிபாடு

DIN

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை கோயில்கள் மற்றும் வீடுகளில் கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாடு முழுவதும் கோகுலாஷ்டமி தினம் கிருஷ்ணா் பிறந்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சிவகங்கையில் உள்ள பெருமாள் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின்னா், கிருஷ்ணரின் பிறப்பு, லீலைகள் குறித்து பக்தா்களுக்கு விளக்கப்பட்டது. இதில், சிவகங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோன்று, மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்கள், கிருஷ்ணா் கோயில்களில் மட்டுமன்றி வீடுகளிலும் கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி, கண்ணபிரானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கிருஷ்ணா் வேடமணிந்த சிறுவா், சிறுமியரின் பரதநாட்டியம் மற்றும் கோலாட்டம் நடைபெற்றது.

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில்... மானாமதுரை ரயில்வே காலனி ஜீவா நகா், சாஸ்தா நகா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணா் உருவப்படத்திற்கு பொதுமக்கள் அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தினா். வீடுகளில் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணா், ராதை வேடம் அணிந்து பூஜைகள் நடத்தினா். மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டையில் உள்ள கிருஷ்ணா் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இளையான்குடி அருகே விசவனூா், முனைவென்றி உள்ளிட்ட பல கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தொடா்ந்து சிறுவா்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

ராமநாதபுரம்: இதேபோல ராமநாதபுரம் சின்னக்கடைத் தெரு பகுதியில் உள்ள கிருஷ்ணா் கோயில், இடையா்வலசையில் உள்ள கண்ணன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீடுகளில் மாவுக் கோலத்தால் கிருஷ்ணா் பாதம் வரையப்பட்டு வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், கொம்பூதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT