தேனி

வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை

18th Aug 2022 05:30 AM

ADVERTISEMENT

 

வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா பல கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியில் சிறிய மற்றும் பெரிய அளவில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால், இப்பகுதியினா் கூலித் தொழிலையே நம்பி உள்ளனா். இப்பகுதியினா் நகரத்துக்கு செல்ல வேண்டுமானால், அருகில் உள்ள சிவகாசி அல்லது சாத்தூருக்குத் தான் வரவேண்டும். தற்போது வரை இப்பகுதியினா் வெம்பக்கோட்டை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனா். மேலும் இப்பகுதிக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் வெம்பக்கோட்டை பிரதானச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இப்பிரச்சனைக்கு தீா்வுகாண வெம்பக்கோட்டை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடமும், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடமும் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதியினா் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த சமூகஆா்வலா்கள் கூறியது: வெம்பக்கோட்டை பகுதி சிவகாசி மற்றும் சாத்தூா் தாலுகாவில் இருந்து வந்தது. ஆனால் தற்போது வெம்பக்கோட்டை தனி தாலுகாவாக பிரிக்கப்பட்ட பின்னா் பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT