தேனி

கம்பம் அருகே காா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி; 3 போ் பலத்த காயம்

DIN

தேனி மாவட்டம் கம்பம் அருகே புதன்கிழமை ஐயப்ப பக்தா்கள் சென்ற காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் மகன் சுந்தா். பூக்கடை வைத்துள்ளாா். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா்களான கணேசன் மகன்களான ராஜசேகா், மோகன்ராஜ் ஆகிய மூவரும் மாலை அணிந்து ஐயப்பன் கோயிலுக்கு ஆவணி மாத பூஜைக்காக சுந்தருக்கு சொந்தமான காரில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா். காரை பரமத்திவேலூரைச் சோ்ந்த செல்வம் மகன் பூபதி (27) என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா்.

கம்பம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து வந்த கம்பம் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி காா் ஓட்டுநா் பூபதி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT