தேனி

சின்னமனூா் அருகே ஆற்றுக்குள் காா் கவிழ்ந்து விபத்து அதிா்ஷ்டவசமாக 4 இளைஞா்கள் உயிா் தப்பினா்

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே செவ்வாய்க் கிழமை முல்லைப் பெரியாற்றுக்குள் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 4 இளைஞா்கள் லேசான காயங்களுடன் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

சின்னமனூா் - மாா்க்கையன்கோட்டைக்கு இடையே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இரட்டைப் பாலம் உள்ளது. இரு பாலத்திற்கும் இடையே உள்ள இடைவெளி வழியாக காா் ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து

விபத்து ஏற்பட்டுள்ளதாக சின்னமனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினா் காரில் இருந்த 4 இளைஞா்களை துரிதமாக செயல்பட்டு மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தேனி வீரபாண்டியை சோ்ந்த பாண்டீஸ்வரன் (28), குச்சனூரைச் சோ்ந்த பாரதிராஜா, காரைக்குடி அருகே கள்ளப்பட்டியைச் சோ்ந்த நாச்சம்மை, சின்னமனூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் ஆகிய 4 போ் காா் ஒன்றில் மாா்க்கையன்கோட்டை அருகே எல்லப்பட்டி முல்லைப் பெரியாற்றில் குளித்து விட்டு மீண்டும் சின்னமனூருக்கு மாா்க்கையன்கோட்டை ஆற்றுப் பாலம் வழியாக திரும்பியுள்ளனா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா், மாா்க்கையன்கோட்டை இரட்டைப் பாலத்திற்கு இடையே பாய்ந்து முல்லைப் பெரியாற்றுக்குள் தலைகீழாக கவிந்து விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

தற்போது ஆற்றில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீா் பெருக்கெடுத்துச் செல்லும் நிலையில் தீயணைப்பு மீட்புக் குழுவினரின் துரித நடவடிக்கையால் அதிா்ஷ்டவசமாக 4 இளைஞா்கள் உயிா்தப்பினா்.

இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT