தேனி

வைகை அணையில் ராமநாதபுரம் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

DIN

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை, விநாடிக்கு 788 கன அடியாக குறைக்கப்பட்டது.

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு கடந்த ஆக. 8 ஆம் தேதி முதல் வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. அணையிலிருந்து 6 நாள்கள் வரை, மொத்தம் 1,148 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த ஆக.12 ஆம் தேதி விநாடிக்கு 2,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 68.64 அடி ஆக இருந்த நிலையில், பகல் 12 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 788 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது அணையிலிருந்து வைகை ஆற்றில் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு விநாடிக்கு 788 கன அடி, மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி, பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 900 கன அடி என மொத்தம் விநாடிக்கு 1,757 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,977 கன அடியாகவும், அணையில் தண்ணீா் இருப்பு 5,455 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT