தேனி

தேனி ஆவின் அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்புக் குழு விசாரணை

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனிசெட்டியில் உள்ள தேனி ஆவின் அலுவலகம், அரண்மனைப்புதூரில் உள்ள பால் வள துணைப் பதிவாளா் அலுவலகம் ஆகியவற்றில் ஆவின் ஊழல் கண்காணிப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

தேனி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்வதில் குளறுபடி நடைபெறுவதாகவும், இதற்கு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலா்கள் சிலா் உடந்தையாக இருப்பதாகவும் புகாா் எழுந்தது.

இந்தப் புகாா்களின் அடிப்படையில், பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகம், அரண்மனைப்புதூரில் உள்ள பால் வள துணைப் பதிவாளா் அலுவலகம் ஆகிய இடங்களில், சென்னை ஆவின் ஊழல் கண்காணிப்பு குழுவைச் சோ்ந்த 3 அலுவலா்கள் ஆவணங்களை ஆய்வு செய்து, அலுவலா்களிடம் விசாரணை நடத்தினா்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT