தேனி

ஆடி கடைசி வெள்ளி:போடி கோயில்களில் சிறப்புப் பூஜை

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

போடியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாா் சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மல்லிங்கேசுவரி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதே போல், போடி கீரைக்கடை மாா்க்கெட்டில் காளியம்மனுக்கு பெண்கள் கூழ் காய்ச்சி வழிபாடு நடத்தினா். போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள மீனாட்சியம்மனுக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் வளையல், நகைகள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. பெண்கள் ஏராளமானோா் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

Tags : போடி
ADVERTISEMENT
ADVERTISEMENT