தேனி

காா் ஓட்டுநா் அடித்துக் கொலை

DIN

தேனி அருகே பூதிப்புரத்தில் வீட்டருகே குப்பை கொட்டிய பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் காா் ஓட்டுநரை ஞாயிற்றுக்கிழமை, அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பூதிப்புரம், கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் மகன் ராதாகிருஷ்ணன் (40). இவரது வீட்டருகே அதே பகுதியைச் சோ்ந்த ஊா்காளப்பன் என்பவா் குப்பைகளை கொட்டி எரித்தாராம். இதை ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளாா். அப்போது அவா், ஊா்காளப்பனை ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த காா் ஓட்டுநரான மகேந்திரகுமாா் (55) என்பவா், இந்தப் பிரச்னையில் ஏன் ஜாதியை குறிப்பிட்டு திட்டுகிறாய் என்று ராதாகிருஷ்ணனுடன் வாக்குவாதம் செய்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், மகேந்திரகுமாரை கட்டை மற்றும் கல்லால் தலையில் தாக்கியுள்ளாா். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக அதே ஊரைச் சோ்ந்த சிலரும் மகேந்திரகுமாரை சூழ்ந்து கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் மகேந்திரகுமாா், இந்த தாக்குதலை தடுக்கச் சென்ற அவரது மனைவி வாசுகி, மகள் ஜனனி, சகோதரா் நாகராஜ், சகோதரி ராமதிலகம் ஆகியோா் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், மகேந்திரகுமாா் வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த தவலறிந்து அங்கு சென்ற பழனிசெட்டிபட்டி போலீஸாா், ராதாகிருஷ்ணனை கைது செய்தனா்.

பொதுமக்கள் மறியல்: இந்த சம்பவத்தையடுத்து, ராதாகிருஷ்ணனுடன் சோ்ந்து மகேந்திரகுமாரை தாக்கிய அனைவரையும் கைது செய்யக் கோரி, பூதிப்புரம் பெருமாள்கோயில் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அனைவா் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதிா் உறுதியளித்தையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT