தேனி

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சியில் தூய்மை இந்தியா முகாம்

23rd Oct 2021 04:40 PM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் முகாம் இன்று (அக்.23) நடைபெற்றது.

முகாமிற்கு சருத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திகண்ணையன் தலைமை வகித்தார். நேருயுவகேந்திரா கணக்காளர் ஸ்ரீராம்பாபு, வட்டாரவளர்ச்சி அலுவலர் சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதல்வர் எஸ்.சேசுராணி வரவேற்புரையாற்றினார்.

இதையும் படிக்க | சிமெண்ட் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் கலந்து கொண்டு, சுகாதாரப்பணிகள் மற்றும் தூய்மை குறித்து பேசினார். மேலும் தூய்மை இந்தியா திட்ட முகாமினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ADVERTISEMENT

சருத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மகளிர் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர், சருத்துப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிக்க | பிர்லா கார்பன் நிறுவனத்தின் சார்பில் குருவாட்டுச்சேரியில் நலதிட்டங்கள் வழங்கும் விழா

முன்னதாக தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. முகாமில் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட ஓருங்கிணைப்பாளர் பாத்திமாமேரி சில்வியா, விழுதுகள் இளைஞர் மன்ற துணைத்தலைவர் ரெங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழுதுகள் இளைஞர் மன்ற செயலாளர் அஜீத்பாண்டி நன்றியுரையாற்றினார். முகாமிற்கான ஏற்பாடுகளை விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தினர் செய்திருந்தனர்.

Tags : பெரியகுளம் தூய்மை இந்தியா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT