தேனி

முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் 133 அடியாக உயா்வு

DIN

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா்மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்து திங்கள்கிழமை அணையின் நீா்மட்டம் 133 அடியாக உயா்ந்தது.

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு திங்கள்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 5,926 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1.70 அடி உயா்ந்து, 133 அடியானது. அணையின் நீா் இருப்பு 5,399 மில்லியன் கன அடியாகவும், தமிழகப்பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,800 கன அடியாகவும் இருந்தது. இதன் மூலம் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில், 162 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் 46.8 மி.மீ., தேக்கடியில் 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT