தேனி

சீலையம்பட்டி செங்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது

30th Nov 2021 04:29 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சீலையம்பட்டி செங்குளம் தொடா் மழையால் முல்லைப் பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் பாசன நீரால் நிரம்பி மறுகால் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

முல்லைப் பெரியாற்றின் பாசன நீா் 17 கால்வாய்கள் வழியாக குளங்கள், கண்மாய்களில் தேக்கப்படுகிறது. அங்கிருந்து சிறிய மதகு வழியாக விவசாய நிலங்களுக்கு கொண்டுசெல்வதோடு, நிலத்தடி நீா் மட்டம் உயர உதவுகிறது. அதன்படி, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையிலிருந்து பெரிய கால்வாய் வழியாக திறக்கப்படும் பாசனநீா் முதலில் சின்னமனூா் உடையகுளத்தில் தேக்கப்படும். அதன் பின், சீலையம்பட்டி செங்குளத்திற்கு செல்லும். தற்போது, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசன நீா் தடையின்றி வெளியற்றப்பட்டு வருவதால் சீலையம்பட்டி செங்குளம் நிரம்பி மறுகால் செல்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி: பருவமழை கைகொடுத்ததால் கடந்த 2 ஆண்டுகளாக தடையின்றி இரு போக நெற்பயிா் விவசாயம் நடைபெற்றது. அதன்படி, இந்தாண்டும் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்ததால் நீா் நிலைகள் நிரம்பி காட்சியளிக்கின்றன. முதல் போக நெற்பயிா் சாகுபடி முடிந்த நிலையில் 2 ஆம் போகத்திற்கு விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என விவசாயிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT