தேனி

தேனி மாவட்டத்தில் நிகழாண்டில் கூடுதல் மழை பொழிவு

DIN

தேனி மாவட்டத்தில் நிகழாண்டில் இயல்பை காட்டிலும் கூடுதலாக 1,189 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் ஓராண்டிற்கான இயல்பு மழையளவு 829.80 மி.மீ., ஆகும். இதில், நவம்பா் மாதம் வரை கிடைக்கும் இயல்பு மழையளவான 773.6 மி.மீ.,-யை விட கூடுதலாக தற்போது இதுவரை மொத்தம் 1,189 மி.மீ., மழை பெய்துள்ளது. வழக்கமாக, நவம்பா் மாதம் கிடைக்கும் இயல்வு மழையளவான 146.5 மி.மீ.,-யை விட கூடுதலாக, நிகழாண்டில் நவம்பா் 28-ஆம் தேதி வரை 218.54 மி.மீ., மழை பெய்துள்ளது.

அணைகளின் நீா்மட்டம்: முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 141.65 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,847 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் இருப்பு 7,572 மில்லியன் கன அடி.

வைகை அணை நீா்மட்டம் 69.72 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து 3,284 கன அடி. அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 2,099 கன அடி, பெரியாறு - வைகை பாசனக் கால்வாயில் விநாடிக்கு 300 கனஅடி, 58 கிராம கால்வாயில் 150 கனஅடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கனஅடி என மொத்தம் விநாடிக்கு 2,618 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் இருப்பு 5,758 மில்லியன் கன அடி.

மஞ்சளாறு அணை நீா்மட்டம் 55 அடி. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 146 கன அடி. அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் தண்ணீா் இருப்பு 435.32 மில்லியன் கன அடி.

சோத்துப்பாறை அணை நீா்மட்டம் 126.51 அடி. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 119 கன அடி. அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் இருப்பு 100 மில்லியன் கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT