தேனி

கரோனா: தமிழக-கேரள எல்லையில் ஆட்சியர் ஆய்வு

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டம், கம்பம் குட்டையா பிள்ளை தெருவில் 8 பேருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டு அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்புப் பணிகளை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ர் கிருஷ்ணன் உன்னி பார்வையிட்டார்.

நகராட்சி ஆணையர் சரவணக்குமார், மேலாளர் முனிராஜ், நகரமைப்பு அலுவலர் தங்கராஜ், சுகாதார அலுவலர் அரசகுமார், கட்டிட சுகாதார ஆய்வாளர்கள் விளக்கம் தெரிவித்தனர். கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டு பகுதிக்கு சென்ற ஆட்சியர் அங்குள்ள தொற்றுநோய் கட்டுப்பாட்டு பகுதியை பார்வையிட்டார். 

பின்னர் 21 ஆவது வார்டு பகுதியான லோயர் கேம்பில் உள்ள மருத்துவ முகாமிற்கு சென்று அங்கு வழங்கப்படும் மாத்திரைகள், பரிசோதனைகளை பார்வையிட்டார். தமிழக-கேரள எல்லைப் பகுதிக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை பார்வையிட்டார். 

ஆட்சியரிடம் ஆணையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் விளக்கம் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT