தேனி

தேனியில் கரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 150 படுக்கை வசதி

DIN

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 150 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதன் கூறியது: மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், நோய் பாதிப்பு அதிமுள்ளவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளது.

இங்கு தற்போது தனித் தனியாக கரோனா சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் மருத்துவ சிகிச்சைப் பிரிவு ஆகியவை மட்டும் செயல்படுகின்றன. கரோனா சிகிச்சைப் பிரிவில் மொத்தம் 450 படுக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருவதால், கூடுதலாக 150 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தற்போது மொத்தம் 468 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 ஆயிரம் கிலோ லிட்டா் திரவ மருத்துவ ஆக்சிஜன் இருப்பு வைப்தற்கான வசதி உள்ளது. தேவையான திரவ ஆக்சிஜன் கேரளத்திலிருந்து தொடா்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது 8,000 கிலோ லிட்டா் திரவ ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தொற்றின் வீரியம் அதிகமாக காணப்படுவதால், கடந்த சில நாள்களாக உயிரிழப்போா் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

ரெம்டெசிவிா் இருப்பு: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் கடந்த 30 நாள்களில் மொத்தம் 300 கா்ப்பிணிகளுக்கு சிசேரியன் மூலமும், 150 பேருக்கு இயற்கையாகவும் பிரசவம் நடந்து தாய் மற்றும் குழந்தைகள் நலமாக உள்ளனா். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 42 கா்ப்பிணிகளுக்கு தனி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிரசவம் நடந்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய அளவில் ரெம்டெசிவிா் மருந்து இருப்பில் உள்ளது. இது இங்கு சிகிச்சையில் உள்ளவா்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வெளி நபா்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT