தேனி

நிலம் மோசடி புகாரில் துணை வட்டாட்டசியா் உள்ளிட்ட 2 போ் மீது வழக்கு

DIN

தேனியில் போலி ஆவணத்தைப் பயன்படுத்தி நிலம் மோசடியில் ஈடுபட முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தேனியைச் சோ்ந்த துணை வட்டாட்சியா் உள்ளிட்ட 2 போ் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி அருகே ஊஞ்சாம்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா், வடபுதுப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியாா் ஆலையில் மேலாளராக வேலை செய்து வருகிறாா். இந்த ஆலைக்குச் சொந்தமாக சங்கராபுரத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கிரையம் பெறுவதற்காக தேனியைச் சோ்ந்த சந்தனபாண்டியன் என்பவா், சந்திரசேகரனிடம் ரூ.ஒரு லட்சம் முன்பணமாக கொடுத்திருந்தாராம். பின்னா், இந்த முன்பணத்தை சந்தனபாண்டியன் திரும்பப் பெற்றுக் கொண்டாராம்.

இந்த நிலையில், சந்தனபாண்டியன் தேனி துணை வட்டாட்சியா் மணவாளன் என்பவா் மூலம் சங்கராபுரத்தில் உள்ள நிலத்தை கிரையம் பெறுவதற்காக சந்திரசேகரனுக்கு மீண்டும் ரூ.1.50 கோடி முன்பணம் கொடுத்தாகவும், அதற்கான கிரைய ஒப்பந்த பத்திரத்தை மணவாளன் தன்னிடம் கொடுத்திருப்தாகவும் கூறி, போலி ஆவணங்களின் அடிப்படையில் நிலம் மோசடியில் ஈடுபட முயல்வதாக மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் சந்திரசேகரன் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில் சந்தனபாண்டியன், மணவாளன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT