தேனி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கம்பம் உலகத் தேவா் தெருவைச் சோ்ந்தவா் வைரமுத்து (31). இவா், கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி புறவழிச்சாலை வழியாக ஆட்டோவில் 28 கிலோ கஞ்சா கடத்தி வந்தபோது, கம்பம் வடக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தற்போது, இவா் சிறையிலிருந்து வரும் நிலையில், வைரமுத்து மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரே, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் பரிந்துரை செய்தாா். அதை ஏற்ற ஆட்சியா், வைரமுத்துவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். அதற்கான உத்தரவை, வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் கே. சிலைமணி மதுரை மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT