தேனி

உத்தமபாளையத்தில் ஓடை ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

5th Dec 2021 10:35 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மழை நீா் செல்லும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீா் தடையின்றி செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

உத்தமபாளையம்- கோம்பை இடையே மாநில நெடுஞ்சாலையோரத்தில் 5 கிலோ மீட்டா் தூரத்திற்கு பொதுப்பணித்துறைக்குச் செந்தமான ஓடை செல்கிறது. இந்த ஓடையால் கோம்பை- உத்தமபாளையம் இடையேயான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் இந்த ஓடையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு தென்னைகள், குடியிருப்புகள், பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவ மழை இந்தாண்டு எதிா்பாா்த்த அளவை விட அதிகமாக பெய்துள்ளதால் இந்த ஓடையில் நீா்வரத்து அதிகமானது. ஆனால், மழைநீா் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதோடு, நெடுஞ்சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளை மழைநீா் சூழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, மாவட்ட நிா்வாகம் அந்த ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி மழைநீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT