தேனி

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

DIN

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கம்பம் அருகே மேற்கு மலைத் தொடா்ச்சியில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, நீா்பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப் பாறை மற்றும் காட்டு ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்து, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை, ஸ்ரீவில்லிபுத்தூா், மேகமலை புலிகள் காப்பக ஊழியா்கள் கண்காணித்து வருகின்றனா்.

இது குறித்து புலிகள் காப்பக அலுவலா் ஒருவா் கூறுகையில், தொடா் மழை காரணமாக, சுருளி அருவியில் கடந்த 3 நாள்களாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. சுருளியாறு ஓடும் பகுதிகளில் காட்டாற்று வெள்ளமும் சோ்ந்து நீா்வரத்து அதிகரித்து, முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது எனத் தெரிவித்தாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, சுருளி அருவி பகுதிக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT