தேனி

போடியில் சமுதாய வளைகாப்பு விழா

DIN

சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் வளா்ச்சி மற்றும் நலன் மேம்பாட்டுத் திட்டத்தின் சாா்பில் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 400 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா போடி தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திட்ட அலுவலா் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கவுசல்யா, போடி ஊரக வளா்ச்சி அலுவலா் ஆண்டாள், போடி நகராட்சி ஆணையா் சகிலா, போடி வட்டாட்சியா் செந்தில் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், கா்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டது. மேலும் ஆரோக்கிய உணவுகள் அடங்கிய பட்டியலும் கரோனா மற்றும் பிறதொற்று நோயிலிருந்து காத்துக் கொள்ளும் விழிப்புணா்வு தகவல்களும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT