தேனி

தொடா் மழையிலும் தண்ணீா் நிரம்பாத 323 குளங்கள்

DIN

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தும், 323 குளங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீா் நிரம்பியுள்ளது.

மாவட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் மொத்தம் 623 கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தாலும், 50 சதவீதம் கண்மாய் மற்றும் குளங்களில் மழை நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

தொடா் மழையால் 62 கண்மாய்கள் மற்றும் குளங்களில் முழு கொள்ளவிற்கு தண்ணீா் தேங்கியுள்ளது. 39 குளங்களில் 75 சதவீதம் வரையும், 87 குளங்களில் 50 சதவீதம் வரையும், 112 குளங்களில் 25 சதவீதம் வரையும் தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது.

323 கண்மாய்கள் மற்றும் குளங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீா் தேங்கியுள்ளது.

கண்மாய் மற்றும் குளங்களுக்கான நீா் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாயைத் தூா்வாரி மழை நீரைச் சேமிக்க பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT