தேனி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 3 போ் பலி

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 8,822 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 8,172 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 489 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 34 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 29 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவா்கள் எண்ணிக்கை 14,825 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒரே நாளில் 47 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 14,110 ஆக அதிகரித்துள்ளது.

3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செப். 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கம்பம் மணிநகரத்தைச் சோ்ந்த 67 வயது முதியவா், செப். 27 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கூடலூரைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் அருகே அய்யம்பாளையத்தைச் சோ்ந்த 57 வயதுடைய நபா் என 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT