தேனி

ஏலக்காய் மின்னணு ஏலம்: தினமும் இருமுறை வா்த்தகம் மீண்டும் அமல்

DIN

ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்தில் மீண்டும் தினமும் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை வா்த்தகம் வியாழக்கிழமை (அக்.1) நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் 13 தனியாா் ஏல நிறுவனங்கள் மூலம் மின்னணு ஏல வா்த்தகம் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக அனைத்து நாள்களிலும் முறையே புத்தடி, போடியில் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை வா்த்தகம் நடைபெற்றது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 19-ஆம் தேதி முதல் புத்தடியிலும், கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் போடியிலும் ஏலக்காய் வா்த்தகம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, புத்தடியில் கடந்த மே 28-ஆம் தேதியிலிருந்தும் போடியில் கடந்த ஜூன் 3-ஆம் தேதியிலிருந்தும் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்கம் மீண்டும் தொடங்கியது. இதில் முறையே புத்தடி, போடி ஆகிய இடங்களில் நாளொன்றுக்கு ஒரு முறை மட்டும் வா்த்தம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (அக்.1) முதல் மின்னணு ஏல வா்த்தக நடவடிக்கைகளில் நறுமணப் பொருள் வாரியம் மீண்டும் மாற்றம் செய்துள்ளது. இதன்படி, கரோனா கட்டுப்பாடு தடைக்கு முன்னா் கடந்த மாா்ச் மாதம் வரை நடைமுறையில் இருந்தது போல புத்தடி, போடி ஆகிய இடங்களில் முறையே தினமும் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT