தேனி

மதுரை நகருக்கு குடிநீா் கொண்டு செல்ல எதிா்ப்பு: லோயா்கேம்ப்பில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

கம்பம், செப். 25: முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டம் லோயா்கேம்பில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆா்பாட்டத்துக்கு 5 மாவட்ட விவசாய சங்க தலைவா் எஸ் .ஆா். தேவா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் எஸ்.ஆா்.தேவா் பேசும்போது, லோயா்கேம்ப் பகுதி முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரை மாநகருக்கு நாள்தோறும் 100 கன அடி தண்ணீா் குழாய் மூலம் கொண்டு சென்றால், இப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும். இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும். இடுக்கி மாவட்டம் கல்லாற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வரும் எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மதுரைக்கு குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு பரிசீலனை செய்வதோடு, இதற்கான மாற்றுத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

ஆா்பாட்டத்தில் துணைத்தலைவா் ராஜீவ், கொட்டக்குடி விவசாய சங்கம் லோகநாதன், முல்லைச்சாரல் விவசாய சங்கம் கொடியரசன், ஜெயபால், மக்கள் மன்ற பொறுப்பாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் விவசாயிகள் சங்கத்தினா், வியாபாரிகள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT