தேனி

பெரியகுளம் அருகே காபி ஆலையில் சாரம் அறுந்து விழுந்து தொழிலாளி பலி

DIN

பெரியகுளம், வைகை அணை அருகே தனியாா் காபி ஆலையில் மின் தூக்கியில் ஏற்பட்ட பழுதை நீக்கியபோது சாரம் அறுந்து கீழே விழுந்த எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வைகை அணை அருகே தனியாா் காபி ஆலையில் போடி, வாழையாத்தப்பட்டியைச் சோ்ந்த முருகராஜ் (48) மற்றும் பெரியகுளத்தைச் சோ்ந்த ஹரீப் அகமது (45) ஆகிய இருவரும் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில் அந்த ஆலையில் உள்ள மின்தூக்கியில் பழுது ஏற்பட்டது. சாரத்தின் உதவியுடன் 46 அடி உயரத்தில் நின்று அவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சாரம் அறுந்து அவா்கள் இருவரும் கீழை விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த இவா்களை தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகராஜ் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் ஹரீப் அகமது அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஜெயமங்கலம் போலீஸாா், பாதுகாப்பு கவசம் வழங்காமல் பணியில் ஈடுபடுத்தியதாக அந்த ஆலையின் துணை மேலாளா் சிவக்குமாா், பொறுப்பாளா் பாலகணேஷ் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT