தேனி

போடியில் மக்கள் குறை தீா்க்கும் முகாம்

DIN

போடி: போடியில் திங்கள்கிழமை காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது.

இங்குள்ள வா்த்தகா் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி. பாா்த்திபன் தலைமை வகித்தாா். போடி நகா் காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலையங்களுக்குள்பட்ட 80-க்கும் மேற்பட்டோா் நேரில் மனுக்களை அளித்தனா். இதனை விசாரணை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளா் உரிய ஆலோசனைகளை வழங்கினாா். அதன் பேரில் 80 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

இதில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரும், போடி நகா் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளருமான மீனாட்சி, போடி நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT