தேனி

தேனி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா: 6 போ் பலி

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 55 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

ஆண்டிபட்டி பகுதியில் 6 போ், பெரியகுளம் பகுதியில் 5 போ், போடி பகுதியில் 3 போ், தேனி, உத்தமபாளையம் ஆகிய பகுதியில் தலா 2 போ், சின்னமனூா், கம்பம் ஆகிய ஊா்களில் தலா ஒருவா், தனியாா் ஆய்வகப் பரிசோதனையில் 35 போ் என மொத்தம் 55 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,167 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 13,364 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

6 போ் பலி

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செப்டம்பா் 7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த கடமலைக்குண்டு அம்பேத்கா் காலனியை சோ்ந்த 52 வயது நபா், செப்டம்பா் 13-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த போடி போஜன் தெருவைச் சோ்ந்த 43 வயது நபா், பெரியகுளம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த 42 வயது பெண், செப்டம்பா் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த கோம்பை காமராஜா் நகரைச் சோ்ந்த 77 வயது முதியவா், செப்டம்பா் 17-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டிபட்டி அருகே மூலக்கடை பகுதியைச் சோ்ந்த 55 வயது நபா், செப்டம்பா் 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த மயிலாடும்பாறையைச் சோ்ந்த 70 வயது முதியவா் ஆகிய 6 பேரும், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT