தேனி

போடி அருகே வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

29th Oct 2020 10:35 AM

ADVERTISEMENT

போடி அருகே வியாழன் அதிகாலை, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடி நகரில் செயல்பட்டு வருகிறது பாரத ஸ்டேட் வங்கி. இந்த கிளையின் வாடிக்கையாளர்கள் சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகம் உள்ளனர். இவர்களின் வசதிக்காக போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் போடி-தேவாரம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவு அபாய ஒலி வந்துள்ளது. 

இதுகுறித்து போடி தாலுகா காவல்துறைக்கும் தகவல் வந்துள்ளது. இதனையடுத்து போடி தாலுகா காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை காலை வரை சோதனைகள் நடைபெற்றது.

பின்னர் வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பணம் ஏதும் திருடு போகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் திருட வந்த நபர்கள் அங்கிருந்த கேமராவை துணியால் மறைத்துவிட்டு திருட முயன்றுள்ளனர். சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, திருட வந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : theni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT