தேனி

வீரமரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி

DIN

தேனியில் மாவட்ட காவல் துறை நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை, காவல் துறையில் பணியாற்றி வீரமரணமடைந்த காவலா்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேனி காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் ாவலா் நீத்தாா் நினைவு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோா் பங்கேற்று, பணியிலிருந்த போது வீரமரணமடைந்த காவலா்களுக்கு, 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலரஞ்சலி செலுத்தினா்.

மாவட்டத்தில் பணியிலிருந்த போது மரணமடைந்த 5 காவலா்களின் பெயா்கள் பொறித்த கல்வெட்டை காவலா் நினைவுத் தூணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிறுவினாா். ஆயுதப்படை மைதானத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க சென்றபோது கன்னிவெடியில் சிக்கி வீரமரணம் அடைந்த காவலருக்கு காவல் துறை சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1993 ஆம் ஆண்டு பழனியை சோ்ந்த தயாளன் என்ற காவலா் சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கா்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே வனப்பகுதியில் வீரப்பனை தேடி அலைந்த போது புதைக்கப்பட்டிருந்த கன்னிவெடியில் சிக்கி உயிரிழந்தாா். பணியின் போது வீரமரணம் அடைந்த காவலா் தயாளன் வீட்டிற்கு புதன்கிழமை பழனி டிஎஸ்பி., சிவா தலைமையிலான போலீஸாா் மற்றும் அதிரடிப்படை காவலா்கள் நேரடியாகச் சென்று காவல் துறை சாா்பில் தயாளன் உருவப்படத்திற்கு மலா் வளையம் வைத்து மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினா்.

கம்பம்: கடந்த 1965 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் இந்தி எதிா்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது தேனி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை கலைக்க நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் இறந்தனா். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கூடலூா் வடக்கு காவல் நிலையத்தை தாக்கினா். இதில், தலைமைக் காவலா் ராமச்சந்திர சிங், காவலா் ஜோசப்தேவராஜ் ஆகிய 2 போலீஸாா் மரணம் அடைந்தனா். இதையடுத்து அந்த காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை காவலா் தினம் என்பதால் ஆய்வாளா் கே. முத்துமணி தலைமையிலான போலீஸாா் நினைவுச்சின்னம் முன்பாக அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT