தேனி

சிறுபான்மையினருக்கு 10 ஆண்டுகளில்ரூ. 7 கோடி வங்கிக் கடன்

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை 5,565 பேருக்கு மொத்தம் ரூ. 7.7 கோடி வங்கிக் கடன் மற்றும் இணை மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மூலம் சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கங்கள் மூலம் முஸ்லிம் பெண்கள் சிறுதொழில் தொடங்குவதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 2,036 பேருக்கு மொத்தம் ரூ.1.8 கோடியும், 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 1,885 பேருக்கு மொத்தம் ரூ. 1.19 கோடி இணை மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினா் புதிய தொழில் தொடங்குவதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 1,197 பேருக்கு மொத்தம் ரூ. 2.63 கோடியும், 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 447 பேருக்கு மொத்தம் ரூ.2,17 கோடியும் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில், கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த 5,565 பேருக்கு மொத்தம் ரூ. 7.7 கோடி வங்கிக் கடன் மற்றும் இணை மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT