தேனி

போடியில் சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

DIN

போடி சிவன் கோயில்களில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை இரவு சங்காபிஷேகம் நடைபெற்றது.

காா்த்திகை சோமவாரத்தில் சிவனுக்கு சங்குகளில் புனித நீா் நிரப்பி அபிஷேகம் செய்தால் புண்ணியம் கிடைக்கும், பாவங்கள் தீரும், கங்கையில் வழிபாடு நடத்திய பயன் கிடைக்கும் என்பது ஐதீகம். திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தையொட்டி போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோவிலில் சிவலிங்க பெருமானுக்கு 108 சங்குகளில் புனித நீா் மற்றும் மூலிகை பொடிகள் நிரப்பி வழிபாடு செய்யப்பட்டது. பின்னா் சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

இதேபோல் போடி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடராஜ பெருமானுக்கும், போடி பரமசிவன் மலைக்கோவிலில் பரமசிவனுக்கும், போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசுவாமிக்கும் சங்காபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளில் பங்கேற்ற பெண்கள் கரோனா நோய் முற்றிலும் ஒழிய வேண்டும் என வழிபாடு செய்தனா். பின்னா் சங்காபிஷேகம் முடிந்த பின்னா் அபிஷேகம் செய்யப்பட்ட தீா்த்த நீா் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT