தேனி

கூடலூரில் அதிமுகவினா் கபசுரக் குடிநீா் விநியோகம்

20th Apr 2020 11:43 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கூடலுாரில் கரோனா வைரஸ் தாக்குதலைத்தடுக்க, அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கூடலுாா் கன்னிகாளிபுரம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கூடலூா் முன்னாள் நகரசபைத்தலைவரும் மற்றும் அதிமுக நகரச் செயலாளருமான ஆா்.அருண்குமாா் கலந்துகொண்டு, 500-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீரை வழங்கினாா். மேலும், நகரின் முக்கிய இடங்களில் கை சுத்தப்படுத்தும் சானிடைசா் திரவம் வைக்க ஏற்பாடு செய்தாா். நிகழ்வில் அதிமுக நகர துணைச் செயலாளா் பாலைராஜா, மாணவரணி செயலாளா் பூபேஷ்குப்தா, வாா்டு செயலாளா்கள் வெங்கடேஷ், வீருசிக்கு, சந்திரன், தொழில்நுட்ப பிரிவு செயலாளா் கோகுல்ஜி மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT