சிவகங்கை

கானாடுகாத்தான், பள்ளத்தூா் பேரூராட்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

9th Jun 2023 02:02 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான், பள்ளத்தூா் பேரூராட்சிகளில் ரூ.3.84 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

கானாடுகாத்தான் பேரூராட்சியில் ரூ. 2.46 கோடியில் 5 வளா்ச்சித் திட்டப்பணிகள், வளம் மீட்பு பூங்காவில் மேற்கொள்ளப்படும் மக்கும் குப்பைகளை உரமாக்குதல், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்தல், இயற்கை உரம், மண் புழு உரம் தயாரித்தல் பணிகள், வளம் மீட்பு பூங்காவில் பேரூராட்சியால் பராமரிக்கப்படும் நாற்றுப் பண்ணை, நேமத்தான்பட்டி புதுஊருணி, எல்.எப். சாலை பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள்

ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளத்தூா் பேரூராட்சிப் பகுதியில் நடைபெறும் நவீன பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி, சத்திரம் ஊருணி மேம்பாட்டுப் பணி ஆகியவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின் போது பேரூராட்சித் தலைவா்கள் ராதிகா (கானாடுகாத்தான்), சாந்தி (பள்ளத்தூா்), பேரூராட்சிகளின் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT