சிவகங்கை

குடிநீா், சாலை வசதி கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

8th Jun 2023 01:45 AM

ADVERTISEMENT

இளையான்குடி அருகே குடிநீா், சாலை வசதி கோரி கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள விசவனூா் ஊராட்சி திருக்கள்ளி கிராமத்தில் குடிநீா், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்துக்கு விசவனூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். கிராம பொறுப்பாளா்கள் ஜோசப், பிரான்சிஸ், சேவியா், அல்போன்ஸ், பாக்கியம், பாலகுருசாமி, சாா்லஸ் குழந்தைராஜ் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதையடுத்து, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உண்ணாவிரதம் நடந்த இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்வதாகவும், சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனா். பின்னா் கிராம மக்கள் உண்ணாவிரத்தை முடித்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT