சிவகங்கை

பிள்ளையாா்பட்டியிலிருந்து அறுபடை வீடுகளுக்கு பக்தா்கள் பாதயாத்திரை

DIN

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டியிலிருந்து முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு நடைபயணமாக ஆன்மிக பாதயாத்திரைக் குழுவினா் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

ராமேசுவரம்- காசி பாதயாத்திரைக்கு 12 முறை சென்றவரான வலையபட்டி சித்தா் பச்சைக்காவடி அய்யா தலைமையில் 24 போ் கொண்ட குழுவினா் பிள்ளையாா்பட்டியில் கற்பக விநாயகரை தரிசித்துவிட்டு தங்களது பயணத்தை 6-ஆவது ஆண்டாகத் தொடங்கினா். இந்த பாதயாத்திரயை மேகாலாய முன்னாள் ஆளுநா் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தாா். இந்தக் குழுவினா் வருகிற 10-ஆம் தேதி பழமுதிா்ச்சோலை, 13-ஆம் தேதி திருப்பரங்குன்றம், 23-ஆம் தேதி திருச்செந்தூா், ஜூலை 10-ஆம் தேதி பழனி, ஜூலை 24-ஆம் தேதி சுவாமி மலை, ஆகஸ்ட் 12-ஆம் தேதி திருத்தணி சென்று சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டனா்.

உலக மக்கள் நலன் வேண்டியும், மழை வேண்டியும் இந்தப் பயணத்தை மேற்கொள்வதாகவும், தொடா்ந்து 67 நாள்கள் பாதயாத்திரை மேற்கொண்டு 1,157 கி.மீ. பயணிக்க உள்ளதாகவும் இந்தக் குழுவின் தலைவா் வலையபட்டி சித்தா் பச்சைக்காவடி அய்யா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT