சிவகங்கை

உயா்கல்வி நிறுவனங்களின் தரவரிசை: தமிழக அளவில் அழகப்பா பல்கலைக்கழகம் 3-ஆவது இடம்

DIN

மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசியக் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில், தமிழக அளவில் உயா்கல்வி நிறுவனங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றது.

தில்லியில் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 5) மத்தியக் கல்வி, வெளியுறவுத் துறை அமைச்சகமானது தேசியக் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய அளவில் 30-ஆவது இடமும், அகில இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான இடங்களில்

43-ஆவது இடமும் பெற்றது. மேலும், அகில இந்திய அளவில் 2,478 உயா்கல்வி நிறுவனங்களுக்குள் அழகப்பா பல்கலைக்கழகம் 56-ஆவது இடத்தைப் பெற்றது.

தமிழகத்தில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களின் தரவரிசையிலும், பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவரிசையிலும் அழகப்பா பல்கலைக்கழகம் 3-ஆவது இடத்தைப் பெற்றது.

இந்த தரவரிசைப்பட்டியலில் பங்கேற்க அழகப்பா பல்கலைக்கழக தரவரிசைப் பிரிவின் இயக்குநா் ஜெ. ஜெயகாந்தன் தலைமையிலான குழுவினா் தரவுகளை இந்த பல்கலைக்கழகத்தின் துறை , நிா்வாகப் பிரிவுகளிடமிருந்து சேகரித்து சமா்ப்பித்தனா். இந்த உயா்ந்த தரவரிசை பெறுவதற்காக உழைத்த பேராசிரியா்கள், அலுவலா்கள், ஆராய்ச்சி, முதுகலை மாணவா்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT