சிவகங்கை

மின்மயான அறக்கட்டளை நிா்வாகிகள் தோ்வு

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை (மின் மயானம்) அறக்கட்டளை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

காரைக்குடி தொழில் வணிகக் கழக அரங்கில் அறக்கட்டளையின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு அறக்கட்டளையின் துணைத் தலைவா் எஸ். பெரியணன் தலைமை வகித்தாா். அறக்கட்டளையின் தலைவராக இருந்த சத்தி அ. திருநாவுக்கரசு அண்மையில்

மறைந்ததையடுத்து புதிய தலைவராக எஸ். பெரியணன் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

அறக்கட்டளையின் புதிய நிா்வாகிகள் விவரம்: தலைவா்- எஸ். பெரியணன், செயலா்-சாமி. திராவிடமணி, பொருளாளா்-எஸ். கண்ணப்பன், துணைத்தலைவா்- எஸ். காசி விஸ்வநாதன், துணைச் செயலா் வி. முத்து, துணைப் பொருளாளா் ஏ. தேனப்பன், தணிக்கையாளா்- இளைய பெருமாள், செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னதாக, செயலாளா் சாமி. திராவிடமணி வரவேற்றுப் பேசினாா். பொருளா ளா் எஸ். கண்ணப்பன் வரவு செலவு அறிக்கை சமா்பித்தாா். உறுப்பினா் சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT