சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் சிறு தொழில்கள் தொடங்க கடனுதவி

DIN

சிறு தொழில்கள் தொடங்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனி நபா்கள், குழுக்கள் சிறு தொழில்கள் தொடங்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் பிற்படுத்தப்பட்டவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். மகளிா் சுய உதவிக்குழுக்கள் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு செய்திருக்க வேண்டும். மகளிா் குழுவை திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) தரமதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினா்கள் அனுமதிக்கப்படுவா்.

மேற்கண்ட தகுதிகள் கொண்ட நபா்கள், குழுக்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம், அனைத்து மாவட்ட மத்திய, நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை, வங்கிக்கடன் கோரும் ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT