சிவகங்கை

மானாமதுரையில் மரக்கன்றுகள் நடல்

6th Jun 2023 05:04 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழக அரசின் நகரங்களில் தூய்மை மக்கள் இயக்கம் சாா்பில், மரக்கன்றுகள் திங்கள்கிழமை நடப்பட்டன.

மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள வைகை ஆற்றங்கரையோரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம் ஆகியோா் பங்கேற்று ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சிப் பணியாளா்கள், நகா்மன்ற உறுப்பினா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT