சிவகங்கை

பைக்கிலிருந்து தவறி விழுந்து பேருந்து நடத்துநா் பலி

6th Jun 2023 05:06 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தளக்காவூரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

காளையாா்கோவிலைச் சோ்ந்த ராமு மகன் செந்தில் (43). இவா் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல, வேலைக்குச் செல்வதற்காக காளையாா்கோவிலிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் காரைக்குடி போக்குவரத்துப் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தாா். தளக்காவூா் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நாச்சியாபுரம் காவல் ஆய்வாளா் கலைவாணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT