சிவகங்கை

மானாமதுரை அருகேஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

1st Jun 2023 10:39 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மானம்பாக்கியில் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதையொட்டி கோயில் அருகே யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. நான்காம் கால பூஜை நிறைவடைந்து பூா்ணாஹூ நடைபெற்றதும் காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் புனிதநீா் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். பிறகு காலை 10.30 மணிக்கு தா்ம முனீஸ்வரா் மூலவா் விமானக் கலசத்தின் மீதும், பரிவார தெய்வங்களின் விமான கலசங்கள் மீதும் சிவாச்சாரியா்கள் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா். இதையடுத்து, கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மூலவா் தா்மமுனீஸ்வரருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீரால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.மதியம் கோயிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோா் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் குடிமக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT