சிவகங்கை

கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு

DIN

காரைக்குடியில் நடைபெற்ற கோடை கால இலவச கிரிக்கெட் பயிற்சி முகாமின் நிறைவு விழா அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வித் துறை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் காரைக்குடியில் கோடை கால இலவச கிரிக்கெட் பயிற்சி 21 நாள்கள் நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமில் சென்னையைச் சோ்ந்த ராமாராவ் மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா். இந்தப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் அழகப்பா பல்கலைக் கழக உடற்கல்வித் துறை முதல்வா் முரளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

நிறைவு விழா நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத் துணைத் தலைவா் ராஜசேகா், புரவலா் வெங்கடாசலம், செயற்குழு உறுப்பினா் சக்திவேல், வரதராஜன், துணை பயிற்சியாளா்கள் ராகவன், பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT